2014-04-25 15:59:28

திருத்தந்தை 23ம் ஜான் பிறந்த ஊரான Sotto il Monte மக்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி


ஏப்.25,2014. கர்தினால் ஆஞ்சலோ ரொங்கால்லி அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து, Bergamo மற்றும் Sotto il Monte என்ற பெயர்கள் உலக மக்கள் மத்தியில் புகழ்பெற்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வேள்ளியன்று வெளியிட்ட ஒரு செய்தியில் கூறியுள்ளார்.
ஏப்ரல் 27, வருகிற ஞாயிறன்று, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், புனிதராக உயர்த்தப்படவிருக்கும் நிகழ்வையொட்டி, அத்திருத்தந்தையின் பிறந்த ஊரான Sotto il Monte மற்றும் Bergamo பகுதி மக்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
Bergamo பகுதியில் வாழும் மக்கள், எழ்மையானக் குடும்பங்களிலிருந்து வருபவர் என்றாலும், அவர்கள் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் நம்பிக்கை, அளவிடமுடியாத செல்வமாக உள்ளதென்று திருத்தந்தை அம்மக்களைப் பாராட்டியுள்ளார்.
திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், இவ்வுலகிற்கு விட்டுச் சென்ற பெரும் கொடை, 'உடன்பிறந்தோர்' என்ற உணர்வு என்பதை, தன் செய்தியில் வலியுறுத்தியத் திருத்தந்தை, அவ்வுணர்வை வளர்ப்பது Bergamo மக்களின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
'Eco di Bergamo' என்ற செய்தித்தாள் உருவாக்கியுள்ள குடும்பத்தின் ஓர் அங்கமாக இருந்த கர்தினால் ரொங்கால்லி அவர்கள், திருத்தந்தையாக மாறியப் பின்னரும், இச்செய்தித்தாள் வழியே, தன் வேர்களை மறக்காமல் இருந்தார் என்பதைக் கூறியத் திருத்தந்தை, இச்செய்தித்தாளுடன் தொடர்பு கொண்டோரைச் சிறப்பாக வாழ்த்தியுள்ளார்.Bergamoவின் ஆயர், Francesco Beschi அவர்கள் வழியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தியில், அப்பகுதியில் உள்ள கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல், அப்பகுதி மக்கள் அனைவருக்குமே ஏப்ரல் 27 சிறப்புமிக்க நாளாக அமையும் என்று வாழ்த்தி, தன் ஆசீரை வழங்கியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.