2014-04-24 16:32:17

புனித வெள்ளியன்று அருள் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு, மத்திய ஆப்ரிக்க மதத் தலைவர்கள் கடும் கண்டனம்


ஏப்.24,2014. மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டில், புனித வெள்ளியன்று அருள் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு, அந்நாட்டு மதத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Bossangoa என்ற மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள் பணியாளர், Christ Forman Wilibona என்பவர், புனித வெள்ளி திருவழிபாட்டை நடத்த காரில் சென்றபோது, ஆறுமுறை சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
இதற்கு முன்னதாக, புனித வாரத்தின் புதன் கிழமையன்று, Bossangoa பேராயர், Nestor-Désiré Nongo Aziagbya அவர்களும், மற்றொரு மறைமாவட்டத்தைச் சேர்ந்த 3 அருள் பணியாளர்களும் Seleka போராளிகளால் கடத்தப்பட்டுள்ளனர் என்று Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆள்கடத்தல், கொலை ஆகிய கொடுமைகளை வன்மையாக் கண்டனம் செய்த, ஆப்ரிக்கக் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், பேராயர் Dieudonné Nzapalainga அவர்கள், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் அமைதி வளர்வதற்கு மக்கள் அனைவரும் செபிக்கும்படி விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.