2014-04-24 16:11:06

ஏப்.25,2014. புனிதரும் மனிதரே : அழுத்தமான அறிவுரைகளை வழங்கியவர்
(முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால்)


குடும்பம் எப்படிச் செல்கின்றதோ அப்படியேதான் நாடும் செல்லும். அவ்வாறே நாம் வாழும் முழு உலகமும் இருக்கும்.
இன்பம், வசதி, சுதந்திரம் ஆகியவற்றைத் தெய்வங்களாகக் கொண்டிருக்கும் எந்த ஒரு சமுதாயத்தின் மத்தியில் மக்கள் தங்கள் இதயங்களை மூடிக்கொண்டு தன்னலமாக மாறுவதே குடும்ப வாழ்வுக்குப் பெரிய ஆபத்து.
ஒருபோதும் போர் வேண்டாம். வெறுப்பும் சகிப்பற்றதன்மையும் மீண்டும் ஒருபோதும் வேண்டாம். 20ம் நூற்றாண்டு நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம் இது.
ஒளி மங்கத் தொடங்கும்போது அல்லது முழுவதும் மறையும்போது நாம் பொருள்களை உள்ளது உள்ளபடி பார்க்க முடியாது.
ஒரு சிறிய ஒளியும் இரவின் இருளை அகற்றிவிடும்.
மனிதர் மகிழ்ச்சியாக இருக்கவே படைக்கப்பட்டனர்.
உண்மையான மகிழ்ச்சி வெற்றியாகும். இதனை நீண்ட மற்றும் இன்னலான போராட்டமின்றி அடைய முடியாது.
மனிதர் அன்பின்றி வாழ முடியாது. அன்பில்லாமல் வாழ்பவர் தனக்கே புரியாத மனிதராக இருப்பார். ஒருவருக்கு அன்பு கிடைக்காவிட்டால், ஒருவர் அன்பை அனுபவிக்காவிட்டால் அவரது வாழ்வு அர்த்தமற்றதாக அமையும்.
இவ்வாறெல்லாம் சொன்னவர் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.