2014-04-23 16:28:00

அரசின் அடக்கு முறைகளையும் தாண்டி, வியட்நாம் கத்தோலிக்க மக்கள், புனித வார நிகழ்ச்சிகளில் ஆர்வமானப் பங்கேற்பு


ஏப்.23,2014. வியட்நாம் அரசின் அடக்கு முறைகளையும் தாண்டி, அந்நாட்டு கத்தோலிக்க மக்கள், புனித வார நிகழ்ச்சிகளில் ஆர்வமாகப் பங்கேற்றனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மலைகள் அதிகம் நிறைந்த Konum பகுதியில், பொதுவான வழிபாட்டுத் தலங்கள் அமைக்கக் கூடாது என்று வியட்நாம் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதால், அப்பகுதியின் ஆயர் Michael Duc Hoang Oanh அவர்கள், தனியார் இல்லம் ஒன்றில் புனித வார வழிபாடுகளை நிகழ்த்தினார்.
அதேபோல், Dak Mot மாவட்டத்திலும் பல இடங்களில் அரசின் கவனத்தை ஈர்க்காமல், நடைபெற்ற புனித வார நிகழ்ச்சிகளில் 3000த்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர் என்று ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
மத உரிமைகள் பெரும்பாலும் மறுக்கப்பட்டுள்ள வியட்நாமில், கிறிஸ்தவ மற்றும் புத்த மதத்தலைவர்கள் அரசின் அடக்கு முறைகளுக்கு அதிகம் உள்ளாகின்றனர் என்றும் இச்செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.