2014-04-22 16:54:08

உலகிலேயே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் நாடாக சீனா மாறும்


ஏப்.22,2014. அடுத்த 15 ஆண்டுகளில் சீனாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து உலகிலேயே அதிகக் கிறிஸ்தவர்களைக் கொண்ட நாடாக அது மாறும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது.
Catholic Online என்ற செய்தி நிறுவனத்தின் கணிப்புப்படி, 2030ம் ஆண்டில் சீனாவில் 16 கோடி எவாஞ்சிலிக்கல் பிரிவினைச்சபைக் கிறிஸ்தவர்களும் 8 கோடியே 70 இலட்சம் கத்தோலிக்கர்களும் இருப்பர்.
உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில், அரசின் கடவுள் மறுப்புக் கொள்கைகளையும் தாண்டி, கிறிஸ்தவ மறையை மக்கள் தழுவுவது அதிகரித்து வருவதாகவும், விரைவில் கிறிஸ்தவம் சீன அரசியலிலும் தன் தாக்கத்தைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவம் மீது எண்ணற்ற கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள சீனாவில், கிறிஸ்தவம் வேகமாக பரவி வருவதை, தற்போது அரசு அதிகாரிகள் நினைத்தாலும் நிறுத்தமுடியாத நிலைக்குச் சென்றுள்ளது என Catholic Online செய்தி நிறுவனம் கருத்துத் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Catholic Online








All the contents on this site are copyrighted ©.