2014-04-12 16:21:08

இந்தியாவில் ஆண்டுக்கு பத்து இலட்சம் பேருக்கு புற்றுநோய்


ஏப்.12,2014. உலகிலுள்ள புற்றுநோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர், இந்தியா, சீனா, இரஷ்யா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர் என த லான்சென்ட் மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய 40 விழுக்காட்டிரைக் கொண்டுள்ள இந்த மூன்று நாடுகளில் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உலகின் மொத்த புற்றுநோயாளிகளில் 46 விழுக்காடு எனவும், இந்நாடுகள், உலகில் இடம்பெறும் புற்றுநோய் இறப்புக்களில் 52 விழுக்காட்டைக் கொண்டுள்ளன எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்நோயைக் கட்டுப்படுத்த அந்தந்த நாடுகளின் அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, நாற்பது புற்றுநோய் வல்லுனர்கள் இணைந்து வெளியிட்ட இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 6 முதல் 7 விழுக்காட்டினர் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர். 2035ம் ஆண்டில் புற்றுநோயால் ஆண்டு ஒன்றிற்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 17 இலட்சமாகவும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பத்து விழுக்காடாக உயரும் எனவும் கூறப்படுகிறது.

ஆதாரம் : the journal







All the contents on this site are copyrighted ©.