2014-04-11 16:28:04

பாகிஸ்தானில் கிறிஸ்தவ மற்றும் இந்து மதச் சிறுமிகள், முஸ்லிம்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்


ஏப்.11,2013. பாகிஸ்தானில் கிறிஸ்தவ மற்றும் இந்து சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த ஏற்க்குறைய ஆயிரம் சிறுமிகள் ஒவ்வோர் ஆண்டும் கடத்தப்பட்டு இசுலாமுக்கு மதம் மாற்றப்பட்டு, கட்டாயமாக முஸ்லிம்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்று இவ்வாரத்தில் வெளியான ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.
பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு உட்பட பல அரசு- சாரா அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 700 கிறிஸ்தவப் பெண்களும், 300 இந்துமதச் சிறுமிகளும் இவ்வாறு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கிறிஸ்தவப் பெண்களும், சிந்து மாநிலத்தில் இந்துமதச் சிறுமிகளும் கட்டாயமாக முஸ்லிம்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் எனவும், இவர்கள் எல்லாரும் 12க்கும் 25 வயதுக்கும் உட்பட்டவர்கள் எனவும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.