2014-04-11 16:28:17

உலகில் 2012ம் ஆண்டில் ஏறக்குறைய ஐந்து இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஐ.நா. குற்றவியல் நிறுவனம்


ஏப்.11,2013. திட்டமிட்டு நடத்தப்படும் கொலைகளால் உலகில் 2012ம் ஆண்டில் ஏறக்குறைய ஐந்து இலட்சம் பேர் தங்கள் வாழ்வை இழந்துள்ளனர், இக்கொலைகள் அமெரிக்காவிலும், ஆப்ரிக்காவிலும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன என்று, ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனமான UNODC அறிவித்தது.
திட்டமிட்ட கொலைகள் குறித்த உலகளாவிய ஆய்வு பற்றி இலண்டனில் இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய, நிறுவனத்தின் பொது விவகாரத் துறை இயக்குனர் Jean-Luc Lemahieu, உலகில் திட்டமிட்டு நடத்தப்படும் கொலைகளுக்குப் பலியாகுவோரில் ஆண்கள் ஏறக்குறைய எண்பது விழுக்காட்டினர் என்று கூறினார்.
இக்கொலைக் குற்றங்களைச் செய்வோரில் 95 விழுக்காட்டினர் ஆண்கள் என்றும், இக்கொலைகளில் ஏறக்குறைய பதினைந்து விழுக்காடு வீடுகளில் இடம்பெறுகின்றன என்றும் கூறினார் Lemahieu.
பெண்களுக்கு, வீடு மிகவும் ஆபத்தான இடமாக இருப்பதாகவும், இந்தப் பிரச்சனையை நிவர்த்தி செய்வதற்கு ஆவன செய்யப்படுமாறும் Lemahieu கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.