2014-04-10 16:27:05

சீனாவின் சமூக வலைத்தளத்தில் 'இயேசு' என்ற வார்த்தை மிக அதிக அளவில் தேடப்படும் வார்த்தையாக உள்ளது


ஏப்.10,2014. சீனாவில் பயன்படுத்தப்படும் Weibo என்ற சமூக வலைத்தளத்தில் 'இயேசு' என்ற வார்த்தை அந்நாட்டின் அரசுத் தலைவர் 'Xi Jinping' என்ற வார்த்தையை விட மிக அதிக அளவில் தேடப்படும் வார்த்தையாக உள்ளது என்று ஓர் ஆய்வுக் கணிப்பு கூறியுள்ளது.
கம்யூனிச ஆதிக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்டு வரும் சீனாவில், Twitterக்கு இணையான Weibo என்ற சமூக வலைத்தளத்தில் அண்மையில் எடுக்கப்பட்ட கணிப்பு ஆச்சரியம் தரும் பல முடிவுகளைத் தந்துள்ளது.
'இயேசு' என்ற சொல் 1 கோடியே 80 இலட்சம் முறை தேடப்படும் வேளையில், அரசுத் தலைவர் 'Xi Jinping' என்ற வார்த்தை, 53 இலட்சம் முறையே தேடப்பட்டு வருகிறது.
விவிலியம் என்ற சொல் 1 கோடியே, 70 இலட்சம் முறை தேடப்படும் வேளையில், சீனாவின் தந்தை என்று அழைக்கப்படும் மாவோ அவர்களின் எண்ணங்கள் அடங்கிய நூல்கள், 60000 முறையே தேடப்படுவதாக இந்த புள்ளிவிவரம் கூறுகிறது.
அனைத்திற்கும் மேலாக, 'கிறிஸ்தவக் குழுக்கள்' என்ற வார்த்தை, 4 கோடியே 18 இலட்சம் முறை தேடப்படும் வேளையில், 'கம்யூனிசக் கட்சி' என்ற வார்த்தை, 53 இலட்சம் முறையே தேடப்பட்டுள்ளது என்று இந்த Weibo கணிப்பு கூறுவதாக UCAN செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது..

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.