2014-04-09 16:30:00

இந்தோனேசியாவில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சமாதானத்தை உருவாக்க பெண்கள் முயற்சி


ஏப்.09,2014. இந்தோனேசியாவின் Peso பகுதியில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சமாதானத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக, இவ்விரு மதங்களையும் சார்ந்த பெண்கள் Sulawesi நகரில் ஒரு கூட்டம் நடத்தினர்.
Peso பகுதியில் அமைந்துள்ள 70 கிராமங்களிலிருந்து வந்த 450க்கும் அதிகமான பெண்களில் பலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எனினும், அப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நிலவிவரும் இருக்கமானச் சூழலை நன்கு உணர்ந்தவர்கள் என்று ஆசியச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இப்பெண்களில் பலர் முதல் முறையாகத் தங்கள் கிராமங்களை விட்டு Sulawesi நகருக்கு வந்துள்ளனர் என்றும், 1997ம் ஆண்டு முதல் தங்கள் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே நிலவி வரும் பகை உணர்வைத் தீர்க்கும் ஆர்வம் இப்பெண்களிடம் உருவாகியுள்ளது என்றும், இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த Lilan Gogali என்ற பெண் ஆசிய செய்தியிடம் கூறினார்.
1997, மற்றும் 2001ம் ஆண்டுகளில் நடைபெற்ற மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர், மற்றும் பல கிறிஸ்தவக் கோவில்களும், இல்லங்களும் தீக்கிரையாக்கப்பட்டன என்றும், 2005ம் ஆண்டு பள்ளிக்குச் சென்ற கிறிஸ்தவப் பெண்களில் மூவர் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டது அப்பகுதியை அதிர்ச்சியடையச் செய்தது என்றும் ஆசியச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.