2014-04-08 15:23:46

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தென் கொரியத் திருப்பயணத்தின் தலைப்பு


ஏப்.08,2014. “எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!”(Iஎச.60:1) என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தென் கொரியத் திருப்பயணத்தின் தலைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஆகஸ்ட் 14 முதல் 18 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியாவுக்கு மேற்கொள்ளும் திருப்பயணம், முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் அந்நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறுகிறது.
தென் கொரிய ஆயர் பேரவையின், இத்திருப்பயணத் தயாரிப்புக் குழு, இத்திருப்பயணத்துக்கான தலைப்பையும், இலச்சினையையும் வத்திக்கானில் இவ்வாரத்தில் சமர்ப்பித்தது.
தென் கொரியாவின் Daejeon மறைமாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 13 முதல் 17 வரை நடைபெறவுள்ள ஆறாவது ஆசிய இளையோர் மாநாட்டிலும், 124 கொரிய மறைசாட்சிகளின் முத்திப்பேறு பட்டமளிப்பு நிகழ்விலும் கலந்துகொள்வதற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாடு செல்கிறார்.
1791க்கும், 1888ம் ஆண்டுக்கும் இடைப்பட காலத்தில் Paul Yun Ji-chung மற்றும் அவரோடு சேர்ந்த 123 தோழர்கள் விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.