2014-04-05 16:29:37

கேம்ரூனில் கடத்தப்பட்ட இத்தாலிய அருள்பணியாளர், அருள்சகோதரிக்காக திருத்தந்தை செபம்


ஏப்.05,2014. ஆப்ரிக்காவின் கேம்ரூனில் இச்சனிக்கிழமை இரவு கடத்தப்பட்ட இரு இத்தாலிய அருள்பணியாளர்கள், ஓர் அருள்சகோதரி ஆகிய மூவரும் விரைவில் விடுதலை செய்யப்படுமாறு அவர்களுக்காகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் விச்சென்சாவைச் சேர்ந்த “fidei donum” சபையின் அருள்பணியாளர்கள் Giampaolo Marta, Gianantonio Allegri, இன்னும், கானடா நாட்டு அருள்சகோதரி ஒருவரும் கேம்ரூன் நாட்டின் வட பகுதியிலுள்ள Maroua மறைமாவட்டத்திலிருந்து கடத்தப்பட்டுள்ள செய்தி திருத்தந்தைக்கு, திருப்பீடத் தூதரகத்திலிருந்து கிடைத்துள்ளது.
இவர்கள் மூவரும் இரு ஆயுதம் ஏந்திய குழுக்களால் கடத்தப்பட்டுள்ளனர் எனவும், இக்குழுக்கள் போக்கோ ஹாராம் இஸ்லாம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவை எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கடத்தல் குறித்து எதுவும் கருத்து தெரிவிக்க முடியாத நிலையில் இருப்பதாக, விச்சென்சா ஆயர் Beniamino Pizziol அவர்கள் தெரிவித்தார்.
மேலும், இத்தாலியின் தேசிய நகராட்சி கழகத்தின் 104 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.