2014-04-03 17:27:01

Cape Verde குடியரசின் பிரதமர் திருத்தந்தையுடன் சந்திப்பு


ஏப்.03,2014. ஏப்ரல் 3, இவ்வியாழன் காலை, Cape Verde குடியரசின் பிரதமர் José Maria Pereira Neves அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பிற்குப் பிறகு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்களையும், நாடுகளுடன் உறவு கொள்ளும் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் தொமினிக் மம்பெர்த்தி அவர்களையும் Cape Verde பிரதமர் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, Cape Verde நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே, சென்ற ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்ட தூதரக உறவுகளின் ஒப்பந்தம், அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திடப்பட்டது.
Cape Verde திருப்பீடத் தூதர் பேராயர் José Avelino Bettencourt உட்பட, திருப்பீடம் மற்றும் Cape Verde அரசின் உயர் அதிகாரிகள் முன்னிலையில், திருப்பீடச் செயலரும் Cape Verde பிரதமரும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.