2014-04-02 15:52:49

கனடாவில், இனி ஒவ்வோர் ஆண்டும், "திருத்தந்தை 2ம் ஜான்பால் நாள்" கொண்டாடப்படும்


ஏப்.2,2014. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் இறைவனடி சேர்ந்த ஏப்ரல் 2ம் தேதி, இனி ஒவ்வோர் ஆண்டும், "திருத்தந்தை 2ம் ஜான்பால் நாள்" என்று கொண்டாடப்படும் என்று கனடாவின் Ontario மாநிலம் இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்து, தற்போது கனடாவின் Ontario மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றும் Dipika Damerla அவர்களின் பரிந்துரையால், இந்த மாநில அவை 'திருத்தந்தை 2ம் ஜான்பால் நாளை' அறிவித்துள்ளது.
நாடுகளிடையே நல்லுறவை வளர்க்கவும், மனித உரிமைகளைக் காக்கவும், அமைதியை உலகில் வளர்க்கவும் அயராது உழைத்த ஓர் உலகத் தலைவர், திருத்தந்தை 2ம் ஜான்பால் என்று Ontario மாநில அவையின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
1948 மற்றும் 2002 ஆகிய இரு ஆண்டுகளில் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் கனடா நாட்டுக்கு சென்றிருந்தபோது, Ontario மக்களால் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டதையும் இத்தீர்மானம் நினைவுகூர்ந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.