2014-03-31 16:22:27

தமிழகத்தில் 3 மாதங்களில் 800 பேர் மாயம் - மாணவியர் எண்ணிக்கை அதிகம்


மார்ச்,31,2014. தமிழகத்தில், கடந்த மூன்று மாதங்களில், 800 பேர் காணாமல் போயிருப்பதாகவும், இதில், மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, குடும்பப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், வீட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது எனக்கூறும் இவ்வறிக்கை, கடந்த ஆண்டில், 2,413 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி வரை தமிழகம் முழுவதும், 800 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என, காவல் துறையில் புகார்கள் பெறப்பட்டு உள்ள நிலையில், இப்பட்டியலில், சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள், புகைப்படங்களுடன், காவல்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.