2014-03-29 15:39:39

தவக்காலத்தில் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு ஊக்குவிக்கும் விதமாக, புதிய இணையதளம்


மார்ச்,29,2014. ஒப்புரவு அருளடையாளத்தை அடிக்கடி பெறுவதற்கு, கத்தோலிக்கரை ஊக்குவிக்கும் விதமாக, GoodConfession.com என்ற இணையதளப் பக்கத்தைத் திறந்துள்ளது Catholics Come Home அமைப்பு.
Catholics Come Home அமைப்பின் தலைவர் Tom Peterson அவர்கள் இப்புதிய இணையதளம் பற்றிப் பேசியபோது, ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாகக் கிடைக்கும் அருள்வரங்களைப் பெறுவதற்கு நம் சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டியது, கத்தோலிக்க விசுவாசத்தை நடைமுறைப்படுத்தும் தங்கள் அமைப்பினருக்கு உள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த இணையதளத்தின் பலன்கள் அற்புதமானவை எனவும், பலரின் வாழ்வு மாறுவதைக் காண முடிகின்றது எனவும், ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்ற பின்னர் உங்கள் ஆன்மாவிலிருந்து பளு நீக்கப்பட்டுவிட்டதாக உணருகின்றனர் எனவும் Tom Peterson கூறினார்.
அடிக்கடி ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதன்மூலம், ஒருவர் தன்னைப் புரிந்துகொள்வது அதிகரிக்கின்றது என்றும், தீமைகளை மேற்கொண்டு அமைதியைக் கொணருகின்றது என்றும் கூறினார் Tom Peterson.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.