2014-03-19 15:52:05

புற்றுநோய் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பழமைவாய்ந்த நோய்


மார்ச்,19,2014. தற்போதைய வட சுடான் பகுதியில் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஓர் இளைஞனின் எலும்புக் கூட்டில் புற்றுநோய்க்கான சான்றுகளை கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டனின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகில் மிக பழமையான புற்றுநோய் பாதிப்பு என்று இதுவரை நம்பப்படும் சம்பவத்தை விட இது 2000 ஆண்டுகள் பழமையானதாகும்.
கி.மு. 1200ம் ஆண்டைச் சார்ந்தது என்று கருதப்படும் ஓர் எலும்புக்கூட்டின் எலும்புகளில் காணப்படும் துளைகள் ஒரு வகையான புற்றுநோய்க்கான சான்று என்றும் மிகெலா பிண்டர் (Michaela Binder) என்ற ஆய்வாளர் கண்டறிந்துள்ளார்.
‘பிலொஸ் ஒன்’ (Plos One) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, புற்றுநோய் என்பது முற்றிலும் ஒரு நவீன கால நோய் அல்ல என்று தெரிவிக்கின்றது.
மேலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நோய் எவ்வாறு பரிணமித்திருக்கிறது என்பதை அறிவியலாளர்கள் கண்காணிக்கவும் இந்த ஆய்வு உதவும் என்று நம்பப்படுகிறது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.