2014-03-18 16:25:10

இவ்வுலகில் பயன்பாட்டுக்கு உள்ள நிலப்பகுதி குறித்த விபரங்களை முதல்முறையாகச் சேகரிக்கத் தொடங்கியுள்ளது FAO நிறுவனம்


மார்ச்,18,2014. விவசாய நிலங்கள், மரங்கள், காடுகள், தரிசு நிலங்கள் ஆகிய இவை ஒவ்வொன்றும் இந்த உலகில் எவ்வளவு நிலப்பரப்பைக் கொண்டுள்ளன என்பது குறித்த புள்ளி விபரங்களை, FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், முதல்முறையாகச் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இப்பூமியில் பயன்படுத்தப்படும் நிலப்பரப்பு குறித்த விபரங்களை அறிந்து கொள்வதற்கும், வேளாண்மை உற்பத்தி உட்பட உலகின் நிலையான வளர்ச்சியையும், வளங்கள் பாதுகாக்கப்படுவதையும் ஊக்குவிப்பதற்கும் இந்தப் புள்ளி விபரங்கள் உதவும் என, இத்திட்டத்தை முன்னின்று நடத்தும் FAO நிறுவன அலுவலகர் ஜான் லதாம் கூறினார்.
இதுவரை பல்வேறு நாடுகளும். பல்வேறு நிறுவனங்களும் இம்மாதிரியான விபரங்களைச் சேகரித்துள்ளன என்றும், உலக அளவில் இவ்வாறு எடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் லதாம் கூறினார்.
மரங்களால் சூழப்பட்ட பகுதி 27.7 விழுக்காடு, தரிசு நிலங்கள் 15.2 விழுக்காடு, புல்வெளிகள் 13.0 விழுக்காடு, விளைச்சல் நிலங்கள் 12.6 விழுக்காடு, பனிப்பகுதி 9.7 விழுக்காடு எனச் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : FAO







All the contents on this site are copyrighted ©.