2014-03-17 17:12:16

அருட்தந்தை உட்பட இரு மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையில் கைது


மார்ச்,17,2014. கடந்த சனிக்கிழமையன்று இலங்கை இராணுவ அதிகாரிகளால் கடத்திச்செல்லப்பட்ட மனித உரிமை பெண் நடவடிக்கையாளர் மற்றும் அவரின் 13 வயது மகள் குறித்து விசாரிக்கச் சென்ற கத்தோலிக்க அருட்தந்தை உட்பட இரு மனித உரிமை நடவடிக்கைளர்களை இலங்கை பாதுகாப்புப்படை கைதுசெய்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் அமைதி மற்றும் ஒப்புரவு மையத்தின் இயக்குனர் அமலமரி தியாகிகள் சபை அருட்தந்தை பிரவீன் மற்றும் மனித உரிமைகள் புள்ளிவிவர மையத்தின் சிறப்பு ஆலோசகர் ருக்கி ஃபெர்னாண்டோ ஆகியோர் கைது குறித்து, அமலமரி துறவுசபை குருக்கள் உறுதிசெய்துள்ளபோதிலும், இராணுவம் இதனை மறுத்துள்ளது.
கிளிநொச்சிப்பகுதியின் மனித உரிமை பெண் நடவடிக்கையாளரும் அவரது 13 வயது மகளும் கைதுச்செய்யப்பட்டு காணாமல் போயுள்ளது குறித்து தர்மபுரம் என்ற பகுதியில் விசாரிக்கச் சென்றபோது, அருட்தந்தை பிரவீனையும் மனித உரிமை நடவடிக்கையாளர் ருக்கி ஃபெர்னன்டோவையும் பாதுகாப்புப்படையினர் கைதுசெய்து இரகசியமாக வைத்துள்ளனர்.

ஆதாரம் AsiaNews








All the contents on this site are copyrighted ©.