2014-03-15 14:45:33

ஏலத்துக்கு வரும் நொபெல் அமைதி விருதுப் பதக்கம்


மார்ச்,15,2014. தென் அமெரிக்க நகைக் கடை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட 1936ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதுப் பதக்கம் ஒன்று நியூயார்க்கில் ஏலத்துக்கு வரவுள்ளது.
பரகுவே மற்றும் பொலிவியா நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்புரவு நடவடிக்கைகளை மேற்கொண்ட அர்ஜென்டீனாவின் வெளியுறவு அமைச்சரான கார்லொஸ் சாவேந்திரா லமாஸ் அவர்களுக்கு இந்தப் பதக்கம் வழங்கப்பட்டிருந்தது.
பல ஆண்டுகள் காணாமல் போயிருந்த இந்தப் பதக்கம், பின்னர் அமெரிக்க அரும்பொருட் சேகரிப்பாளர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது.
23 காரட் தங்கத்தினாலான இந்தப் பதக்கம் ஒரு இலட்சம் டாலர்களுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.