2014-03-14 16:58:58

சிறார் வணிகம் அதிகரிப்பு, ஐ.நா. வல்லுனர் எச்சரிக்கை


மார்ச்,14,2014. உலகில் நாடுகளுக்கிடையே தொடர்புகள் அதிகரித்துவரும்வேளை, சிறார் பாலியல் வணிகமும், அவர்கள் பிற தொழில்களுக்கு விற்கப்படுவதும் அதிகரித்து வருவதாக ஐ.நா. வல்லுனர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகில் இலட்சக்கணக்கான சிறார் பாலியல் வணிகத்தால் பாதிக்கப்பட்டுவரும்வேளை, இக்குற்றத்தைத் தடுப்பதற்கு உலக அளவில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு, ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 25 வது அமர்வில், சிறார் வணிகம் குறித்து சிறப்பு அறிக்கை சமர்ப்பித்த Najat Maalla M’jid கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறாரைத் தவறான வழியில் பயன்படுத்தும் குற்றக்கும்பலுக்குத் தண்டனை வழங்காமல் இருப்பது, இக்குற்றம் குறித்த சமூகச் சகிப்புத்தன்மை, இந்த வணிகத்துக்கு உலக அளவில் ஏற்பட்டுள்ள கோரிக்கை போன்றவை, இக்குற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்று, Maalla M’jid தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டம் இம்மாதம் 25ம் தேதியன்று நிறைவடையும்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.