2014-03-14 16:59:11

அறிவுச்சொத்துக் காப்புரிமைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2013ல் சாதனை


மார்ச்,14,2014. அறிவுச்சொத்துக் காப்புரிமைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2013ம் ஆண்டில் இரண்டு இலட்சத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிவுச்சொத்து நிறுவனமான WIPO கூறியுள்ளது.
காப்புரிமை ஒத்துழைப்பு உடன்பாட்டின்கீழ், கடந்த ஆண்டில் காப்புரிமை கோரி ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்ட 2,05,300 விண்ணப்பங்களில் 56 விழுக்காடு அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்தும், 29 விழுக்காடு சீனாவிலிருந்தும் சமர்ப்பிக்கப்பட்டன என, WIPO நிறுவன இயக்குனர் Francis Gurry கூறினார்.
2012ம் ஆண்டில் 1,94,000மாக இருந்த இவ்வெண்ணிக்கை, 2013ம் ஆண்டில் 5.1 விழுக்காடு அதிகரித்தது என்றும் கூறிய Gurry, ஆராய்ச்சிகளுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்குமெனப் போடப்படும் முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும், உலக அளவில், வாகனத் தொழிற்சாலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காப்புரிமை கேட்கும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன எனவும் கூறினார்.
உலக அறிவுச்சொத்து தினம் ஏப்ரல் 26ம் தேதியாகும்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.