2014-03-12 16:01:34

லெபனானில் சிரியாவின் கத்தோலிக்க ஆயர்கள் நடத்தும் கூட்டம்


மார்ச்,12,2014. சிரியாவில் பணியாற்றும் கத்தோலிக்க ஆயர்களின் கூட்டம், லெபனான் நாட்டின் Raboueh என்ற ஊரில், மார்ச் 12, இப்புதனன்று துவங்கியுள்ளது.
கிரேக்க மெல்கத்திய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, மூன்றாம் கிரகோரியோஸ் லஹாம் அவர்களின் தலைமையில் கூடியுள்ள ஆயர்களின் கூட்டத்தில், காரித்தாஸ் அமைப்பினர், சிரியாவில் மேற்கொண்டு வரும் பணிகளும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் பேசப்படுகின்றன.
Maalula என்ற இடத்திலிருந்து கடத்தப்பட்ட கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பெண் துறவியர் மூன்று நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெறும் இக்கூட்டத்தில், பெண் துறவியரின் விடுதலைக்குப் பயன்படுத்தப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி, சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரு ஆயர்களையும், அருள் பணியாளர்களையும் விடுவிக்கும் முயற்சிகள் இக்கூட்டத்தில் பேசப்படும் என்று அலெப்போவில் பணியாற்றும் ஆர்மீனிய கத்தோலிக்கப் பேராயர் Boutros Marayati அவர்கள், Fides செய்திக்கு குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.
சிரியாவில் இரு ஆயர்கள், ஒரு இயேசு சபை அருள் பணியாளர், ஆர்மீனிய கத்தோலிக்க அருள் பணியாளர் ஒருவர், மற்றும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் அருள் பணியாளர் ஒருவர் என்று ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.