2014-03-11 14:29:59

நான்கு புதிய வாயுக்களால் ஓசோன் படலம் பாதிப்பு


மார்ச்,11,2014. பூமியின் பாதுகாப்பு அடுக்கான ஓசோனை, நான்கு புதிய வாயுக்கள் பாதித்து வருவதாக கிழக்கு அங்கோலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டிஷ்-அண்டார்டிக் ஆய்வுக் குழுவினர் ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை 1985ம் ஆண்டில் முதல் முறையாக கண்டுபிடித்தனர்.
இந்தப் பாதிப்புக்கு காரணம் சி.எப்.சி. வாயுக்கள்தான் என்பது அப்போது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஓசோனைக் காக்க 1987, செப்.16ல் கானடாவில் உள்ள மான்ட்ரீல் நகரில் "மான்ட்ரியல் ஒப்பந்தம்" எனும் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, செப்.16ல் "அனைத்துலக ஓசோன் பாதுகாப்பு தினம்" கடைப்பிடிக்கப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையுள்ள அடுக்கு வாயு மண்டலத்தில்தான் ஓசோன் உள்ளது. புறஊதாக்கதிர்ப் பாதிப்பைத் தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த புறஊதாக்கதிர் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தனாவை.
இதில் மூன்று வாயுக்கள் சி.எப்.சி. வாயுக்கள். மற்றவை ஹைட்ரோ குளோரோ கார்பனாகும். இவை ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவையாகும். இருந்தாலும் சிறிய அளவிலேயே இந்த வாயுக்கள் வெளியேற்றப்படுவதாகவும் இவை தற்போதைய நிலையில் அபாயம் இல்லை எனவும் அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.