2014-03-08 15:28:11

பெரு நாட்டின் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து தலத்திருஅவை வன்மையான கண்டனம்


மார்ச்,08,2014. பெரு நாட்டின் காடுகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது அந்நாட்டுத் திருஅவை.
தென் அமெரிக்க நாடான பெருவின் Iquitos பகுதியில் தண்ணீர் பெருமளவில் மாசு அடைந்துள்ளதாகவும், இது மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லை எனவும் Iquitos தலத்திருஅவையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அப்பகுதியின் 17 சிறிய நகரங்களும் ஆய்வு செய்யப்பட்டதில், அப்பகுதியின் தண்ணீரில் மெர்க்குரி, ஈயம், துத்தநாகம், குரோமியம், அலுமினியம் போன்ற தாதுப்பொருள்கள் கலந்திருப்பதாகவும், மக்கள் குடிப்பதற்கும் பயன்படுத்துவதற்கு அது ஏற்றதாக இல்லையெனவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.