2014-03-08 15:28:29

பெண்களின் மனித உரிமைகளுக்கு ஆதரவாக ஆண்கள் செயல்பட வேண்டும், ஐ.நா.


மார்ச்,08,2014. ஆண்கள் தங்கள் அன்னையர், சகோதரிகள் மற்றும் மகள்களின் மனித உரிமைகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டுமென்று ஐ.நா. அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறுமிகள் மற்றும் மகளிரின் மனித உரிமைகளைக் காக்கவேண்டியது எல்லாரின் கடமை என்றும், சிறுமிகள் மற்றும் மகளிருக்கு எதிரான பாகுபாடுகள் உலகெங்கும் கட்டுப்பாடுகளின்றி இடம்பெறுகின்றன என்றும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி ஐ.நா. தலைமையகத்தில் இவ்வெள்ளியன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய பான் கி மூன், சமுதாயத்தில் ஆண்களும் பெண்களும் சமமாக மதிக்கப்படுவதற்கான ஐ.நா.வின் நடவடிக்கையில் ஆண்களும் சிறுவர்களும் இணையுமாறு கேட்டுள்ளார்.
மார்ச் 08, இச்சனிக்கிழமையன்று இடம்பெற்ற அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு, “அவன் அவளுக்கு” என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தியது ஐ.நா. நிறுவனம்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.