2014-03-05 16:03:07

“Il Mio Papa” என்ற பெயரில், ஒரு புதிய இத்தாலிய வார இதழ்


மார்ச்,05,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 13, வருகிற வியாழனன்று தன் முதல் ஆண்டு தலைமைப் பணியை நிறைவு செய்யும் இவ்வேளையில், இத்தாலிய மொழியில் “Il Mio Papa” என்ற பெயரில், ஒரு புதிய வார இதழ் இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ளது.
மக்களிடையே புகழ் அடைந்துள்ள ஏனைய பெரும் 'ஸ்டார்'களைச் சுற்றி எழும் வழிபாட்டு கலாச்சாரத்தை உருவாக்காமல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை தினசரி வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாக உருவாக்குவதே இந்த வார இதழின் குறிக்கோள் என்று “Il Mio Papa” வார இதழின் ஆசிரியர் Aldo Vitali அவர்கள் கூறினார்.
கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல், மத நம்பிக்கை உள்ளவர், மத நம்பிக்கையற்றவர் என அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்வில் காணப்படும் பல்வேறு நிகழ்வுகள் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் என்று ஆசிரியர் Vitali அவர்கள் எடுத்துரைத்தார்.
புத்தகங்கள், இதழ்கள் ஆகியவற்றை அச்சிட்டு வெளியிடும் Mondadori என்ற புகழ்பெற்ற நிறுவனத்தால், இப்புதனன்று வெளியிடப்பட்ட இந்த முதல் இதழ், 30 இலட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன என்றும், இவ்விதழை Twitter, Facebook ஆகிய அனைத்து சமூகத் தொடர்பு வழிகளிலும் காண முடியும் என்று Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.