2014-03-05 16:04:22

திருத்தந்தையின் Twitter செய்தி - தியாகங்களை மேற்கொள்ள தவக்காலம் ஒரு சிறந்த தருணம்


மார்ச்,05,2014. தியாகங்களை மேற்கொள்ள தவக்காலம் ஒரு சிறந்த தருணம், மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் நோக்கத்துடன் நாம் தியாகங்களை மேற்கொள்வோம் என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 5 கொண்டாடப்படும் திருநீற்றுப் புதனன்று வெளியிட்டார்.
இப்புதனன்று, தன் வழக்கமான புதன் மறையுரையை வழங்கியத் திருத்தந்தை, மாலை 5 மணியளவில் உரோம் நகரில் உள்ள புனித சபீனா பேராலயத்தில் திருநீற்றுப் புதன் திருப்பலியை ஆற்றுகிறார்.
திருப்பலிக்குப் பின், திருத்தந்தை அவர்கள், இப்பேராலயத்திற்கு அருகில் உள்ள தொமினிக்கன் துறவிகளை, தனிப்பட்ட முறையில் சந்தித்தபின், வத்திக்கானுக்குத் திரும்புகிறார்.
மேலும், திருத்தந்தையர் கோடை விடுமுறையில் தங்கச் செல்லும் காஸ்தெல் கந்தோல்போ இல்லத்தைச் சுற்றி அமைந்துள்ள Barberini Garden எனப்படும் பழமை வாய்ந்த தோட்டத்தை மக்கள் பார்வைக்குத் திறந்துவிடுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முடிவெடுத்துள்ளார்.
17ம் நூற்றாண்டு முதல் திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமாக விளங்கும் காஸ்தெல் கந்தோல்போவில் 55 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள Barberini தோட்டம், ஒவ்வொரு வாரமும், திங்கள் முதல் சனிக்கிழமை முடிய மக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / VIS








All the contents on this site are copyrighted ©.