2014-03-04 15:37:05

எவரெஸ்ட்டில் ஏறுவோர் 8 கிலோ குப்பைகளை அள்ளிவர வேண்டும்


மார்ச்,04,2014. மலைச்சிகரங்களில் கழிவுப் பொருட்கள் குவிந்துவருவது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளவேளை, எவரெஸ்ட் மலைச்சிகரத்துக்கு இம்முறை வசந்த காலத்தில் செல்லும் மலையேறிகளும் அவர்களின் ஆதரவு அணியினரும் திரும்பிவரும்போது, ஒவ்வொருவரும் குறைந்தது எட்டு கிலோகிராம் குப்பைகளை அள்ளிவர வேண்டுமென்று நேபாள அரசு கூறியுள்ளது.
மௌன்ட் எவரெஸ்ட் பேஸ் கேம்ப்- என்ற 5,300 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள தளத்துக்கு மேல் செல்லும் எல்லோருக்கும் இந்தப் புதிய சட்டவிதி பொருந்தும் என்று நேபாள அரசின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இவ்வாறு கொண்டுவரவில்லையெனில், அவர்கள் தங்களின் 4,000 டாலர் முன்பணத்தை இழக்க வேண்டியிருக்கும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.
அதிகளவான வெளிநாட்டு மலையேறிகளை ஈர்ப்பதற்காக எவரெஸ்ட் மற்றும் ஏனைய இமயமலைச் சிகரங்களுக்குச் செல்லும் தனிப்பட்ட மலையேறிகளுக்கான கட்டணத்தை கடந்த மாதம் நேபாள அரசு இரத்துசெய்தது.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.