2014-03-04 15:37:12

30 ஆயிரம் ஆண்டு தொற்றுநோய்க் கிருமி கண்டுபிடிப்பு


மார்ச்,04,2014. 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான மிகப் பழமையான தொற்றுநோய்க் கிருமியை சைபீரியப் பகுதியில் பிரெஞ்சு நாட்டு அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
"பித்தோ வைரஸ் சைபீரிக்கும்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொற்றுநோய்க் கிருமி, 98 அடி ஆழத்தில், கிழக்கு சைபீரியக் கடலுக்கு அருகில் உறைந்த தரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உறைபனியில் வெகு ஆழத்தில் இருந்த தொண்மைகாலக் கிருமிகள், தற்போதைய வெப்பநிலை மாற்றத்தால் வெளியே வரத் துவங்கியுள்ளன என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
"பித்தோ வைரஸ் சைபீரிக்கும்" என்ற இக்கிருமி, தற்போதும் சக்தியோடு இருப்பதாகவும், இது அமீபா போன்ற உயிரிகளைத் தாக்கும் சக்தி கொண்டது எனவும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இந்தத் தொற்றுநோய்க் கிருமி மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : IBTimes







All the contents on this site are copyrighted ©.