2014-02-25 15:31:18

ஈராக்கின் எதிர்காலத்துக்கு உண்ணாநோன்பும் செபமும் தேவை, முதுபெரும் தந்தை சாக்கோ


பிப்.25,2014. ஈராக்கிலும், மத்திய கிழக்குப் பகுதியிலும் நல்லதோர் எதிர்காலம் அமையவும், ஈராக்கிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவதைத் தடுக்கவும் உண்ணாநோன்பும் செபமும் தேவை என, ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை முதலாம் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.
தவக்காலத்துக்கென மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள், தவக்காலத்தில் உண்ணாநோன்பும் ஆழமான செபமும் தேவை எனக் கூறியுள்ளார்.
இரத்தும் சிந்தும் சண்டைகளுக்கும், வன்முறைகளுக்கும் மத்தியில் உண்மையான ஒப்புரவை ஏற்படுத்துவதற்குச் செபமும் உண்ணாநோன்பும் உதவும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.
வருகிற மார்ச் 5ம் தேதி தவக்காலம் தொடங்குகிறது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.