2014-02-19 15:12:51

ராஞ்சி உயர்மறைமாவட்டத்தில் கொலையுண்ட இயேசு சபை அருள் பணியாளரின் 50ம் ஆண்டு நினைவு கொண்டாட்டம்


பிப்.19,2014. வடஇந்தியாவில் 1964ம் ஆண்டு கொலையுண்ட இயேசு சபை அருள் பணியாளரின் 50ம் ஆண்டு நினைவைக் கொண்டாடும் முயற்சியில் ராஞ்சி உயர்மறைமாவட்டம் ஈடுபட்டுள்ளது.
1947ம் ஆண்டு முதல் ராஞ்சி பகுதியில் உழைத்த இயேசு சபை அருள் பணியாளர் Herman Rasschaert அவர்கள், 1964ம் ஆண்டு நிகழ்ந்த மதக்கலவரத்தின்போது, மார்ச் 24ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
1964ம் ஆண்டு சனவரி மாதம் முதல் கிழக்கு பாகிஸ்தான் என்று அப்போது வழங்கப்பட்ட பகுதியில் நிகழ்ந்த கலவரங்களில் காயப்பட்ட இந்துக்கள், இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததால், அதைக் கண்ட மக்கள், இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொண்டனர்.
1964ம் ஆண்டு, Gerda என்ற ஊரில், முஸ்லிம்கள் தஞ்சம் அடைந்த ஒரு தொழுகைக் கூடத்தை, ஏனைய பழங்குடி மக்கள் சூழ்ந்து அவர்களைக் கொல்வதற்கு முயன்றபோது, அருள் பணியாளர் Rasschaert அவர்கள், இடைமறித்து அமைதியை நிலைநாட்ட முயன்றார் என்றும், இந்த முயற்சியில் அவர் கொல்லப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
அருள் பணியாளர் Rasschaert அவர்களின் மரணம் பழங்குடியினரிடையே அதிர்ச்சியை உருவாக்கியதால், வன்முறைகள் நிறுத்தப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது.
அருள் பணியாளர் Rasschaert அவர்கள் மரணமடைந்த 50ம் ஆண்டு நினைவைக் கொண்டாடும் முயற்சியில் Kutungia என்ற பங்குத்தளமும், ராஞ்சி உயர் மறைமாவட்டமும் ஈடுபட்டுள்ளன.

ஆதாரம் UCAN








All the contents on this site are copyrighted ©.