2014-02-19 15:16:39

சிங்கப்பூர் பேராயர் William Goh - பணியிடங்களில் செபம் சேரும்போது, அங்கு மகிழ்வும், நிறைவும் பொங்கும்


பிப்.19,2014. நமது பணியிடங்களில் செபம் சேரும்போது, அங்கு மகிழ்வும், நிறைவும் பொங்கும் என்றும், செபம் இல்லாமல் செய்யப்படும் பணிகள் விரைவில் மனச் சோர்வை உருவாக்கும் என்று சிங்கப்பூர் பேராயர் William Goh அவர்கள் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் உயர்மறைமாவட்டத்தின் பல்வேறு அலுவலகங்களில் செயலாற்றும் பணியாளர்கள், ஒவ்வொரு நாள் காலையிலும் செபத்துடன் தங்கள் அலுவல்களைத் துவங்கும்படி வேண்டுகோள் விடுத்து, பேராயர் William Goh அவர்கள் அனுப்பியுள்ள மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.
செபத்தைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தன் மடலுக்குப் பின்னணியாக அமைந்ததென்று கூறும் பேராயர் William Goh அவர்கள், இல்லங்களிலும், இன்னும் பல குழுக்கள் வடிவிலும் செபம் செய்யும் பழக்கம் வளர்க்கப்படவேண்டும் என்று தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் Fides








All the contents on this site are copyrighted ©.