2014-02-18 15:18:44

நைஜீரிய அரசு குடிமக்களைப் பாதுகாக்கவில்லை, ஆயர் பேரவைத் தலைவர் கவலை


பிப்.18,2014. நைஜீரியாவில் போக்கோ ஹாராம் இஸ்லாம் தீவிரவாதக் குழு, இனப்படுகொலைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது, அதேநேரம் அரசு குடிமக்களைப் பாதுகாக்கவில்லை என்று குறை கூறியுள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama .
நைஜீரியாவின் வட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற படுகொலைகள் தனக்கு வியப்பைத் தரவில்லையென பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ள பேராயர் Kaigama, மக்களைப் பயமுறுத்தும் நடவடிக்கைகளை போக்கோ ஹாராம் குழு தொடர்ந்து செய்து வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவதாக அரசு கொடுத்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் பேராயர் கூறினார்.
போக்கோ ஹாராம் தீவிரவாதக் குழுவுடன் இராணுவம் சண்டையிட்டுவரும் வட நைஜீரியாவின் மாநிலங்கள் ஒன்றில் Izghe என்ற கிராமத்தில் குறைந்தது 100 குடிமக்கள் அண்மையில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : CWN







All the contents on this site are copyrighted ©.