2014-02-18 15:18:32

கொரியத் திருஅவையின் வாழ்வுக்கு ஆதரவான தவக்காலச் செபம்


பிப்.18,2014. தென் கொரியாவில் தாய்-சேய் நலவாழ்வுச் சட்டம் இரத்து செய்யப்படுவதற்காக, "மனித வாழ்வுக்கு ஆதரவான தவக்காலச் செபம்" என்ற தலைப்பில் செபமாலை தொடர்ந்து செபிக்கும் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது தலத்திருஅவை.
செயோல் Myeongdong பேராலயத்தில் "மனித வாழ்வுக்கு ஆதரவாக இம்மாதம் 10ம் தேதி நிறைவேற்றப்பட்ட திருப்பலியில், "மனித வாழ்வுக்கு ஆதரவான தவக்காலச் செபம்" குறித்து அறிவிக்கப்பட்டது.
வருகிற மார்ச் 5ம் தேதி திருநீற்றுப் புதனன்று தொடங்கப்படும் மனித வாழ்வுக்கு ஆதரவான செபமாலை பக்தி முயற்சி தவக்காலத்தின் 40 நாள்களுக்கும் தொடர்ந்து செபிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருப்பலியை நிறைவேற்றிய கொரிய ஆயர் பேரவையின் வாழ்வுக்கு ஆதரவான பணிக்குழுத் தலைவர் ஆயர் Lino Lee Seong- hyo, இக்காலத்திய இளையோர் சமூகத் தொடர்பு ஊடகங்களின் தாக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மனித வாழ்வைப் புறக்கணிக்கின்றனர் என்று கூறினார்.
உலகில் பிறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. தென் கொரியாவின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.05 % என்ற அளவில் உள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.