2014-02-15 14:46:55

“கத்தோலிக்க சமூக எண்ணத்தில் மனித மாண்பு” நூல் வெளியீடு


பிப்.15,2014. இந்திய ஆயர் பேரவையின் 31வது நிறையமர்வுக் கூட்டத்தில், கத்தோலிக்க சமூக எண்ணத்தில் மனித மாண்பு என்ற தலைப்பில் நூல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழுவின் செயலர் அருள்பணி சார்லஸ் இருதயம் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூல், மனித மாண்பு குறித்த கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகளின் தொகுப்பாக இல்லாவிடினும், மனித மாண்பு குறித்த விவிலியக் கூறுகளை உள்ளடக்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தை 13ம் சிங்கராயர் தொடங்கி திருத்தந்தை பிரான்சிஸ் வரை பல்வேறு திருத்தந்தையர்களின் சமூகப் போதனைகளும் பரந்த அளவில் இந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
“கத்தோலிக்க சமூக எண்ணத்தில் மனித மாண்பு” என்ற இந்நூலை, மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை, சிவகங்கை ஆயர் சூசைமாணிக்கம், இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழுவின் உறுப்பினர் ஜெரால்டு அல்மெய்தா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

ஆதாரம் : CBCI







All the contents on this site are copyrighted ©.