2014-02-14 16:06:02

ஆப்ரிக்கக் கிராமங்களில் முதலீடுகள் அதிகப்படுத்தப்பட வேண்டும்,ILO


பிப்.14,2014. ஆப்ரிக்காவின் வளமைக்கு கிராமப்புற முன்னேற்றம் இன்றியமையாததாக இருக்கும்வேளை, இதனை, அரசுகளும், கடன் கொடுக்கும் பன்னாட்டு அமைப்புகளும் குறைத்து மதிப்பிடுகின்றன என்று ILO எனும் உலக தொழில் நிறுவனம் கூறியுள்ளது.
வேளாண்தொழிலை ஊக்குவித்து அதைச் சார்ந்து உறுதியான பொருளாதாரத்தை அமைப்பது ஆப்ரிக்காவின் வளமைக்கு மிக முக்கியம் என்றுரைக்கும் ILO நிறுவனத்தின் அதிகாரி Gilbert Houngbo, ஆப்ரிக்காவில் சரியான நேரத்தில் முதலீடுகள் செய்வதன்மூலம் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும் மற்றும் அக்கண்டத்தில் உணவுப்பாதுகாப்பும், சமூக-அரசியல் அமைதியும், நலவாழ்வும் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
ஆப்ரிக்காவில் 60 விழுக்காட்டுக்கு மேற்பட்ட கிராம மக்கள் கடும் ஏழ்மையில் வாழ்கின்றனர் என்றும், அவர்களில் பலர் நகரங்களுக்குச் சென்றுவிட்டனர் என்றும் கூறிய Houngbo, சமூகப் பாதுகாப்பும், அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதும், தொழிலில் பாதுகாப்பும் அவசியம் என்றும் கூறினார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.