2014-02-12 16:40:02

திருப்பீடத்திற்கும், ஹங்கேரி நாட்டிற்கும் இடையே அரசியல் உறவு பரிமாற்றங்கள்


பிப்.12,2014. திருப்பீடத்திற்கும், ஹங்கேரி நாட்டிற்கும் இடையே அரசியல் உறவுகளை உறுதி செய்யும் பரிமாற்றங்கள், ஹங்கேரியின் தலைநகரமான Budapestல் நிகழ்ந்தன.
திருப்பீடத்தின் சார்பில், ஹங்கேரியின் திருப்பீடத் தூதர் பேராயர் Alberto Bottari de Castello அவர்களும், Esztergom-Budapest பேராயர், கர்தினால் Peter Erdo அவர்களும், ஹங்கேரி அரசின் சார்பில், மனிதவளத் துறையின் அமைச்சர் Zoltán Balog அவர்களும், இந்தப் பரிமாற்றங்களில் கலந்துகொண்டனர்.
மேலும், நம்மிடையே வளர்ந்துவரும் சமமற்ற நிலை, வெறும் வறுமையை மட்டும் வளர்க்கவில்லை, மாறாக, நமது சமுதாயத்தின் ஆணிவேரையே அழிக்கின்றது என்று திருப்பீடத்தின் சார்பில், ஐ.நா.அலுவலகங்களில் பணியாற்றும் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்களின் பெயரால், இப்புதன் வெளியிடப்பட்டுள்ள Twitter செய்தி கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.