2014-02-11 15:42:19

உலகெங்கும் 2,50,000 சிறார் படைவீரர்கள்


பிப்.11,2014. உலகெங்கும் 2,50,000 சிறார் மற்றும் இளம்பருவப் படைவீரர்கள் உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறார் படைவீரர்க்கெதிரான அனைத்துலக நாள் பிப்ரவரி 12, இப்புதனன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஊடகச் செய்தி ஒன்றில், இன்று உலகில் 153 நாடுகள் சிறார் படைவீரர்க்கெதிரான அனைத்துலக உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

சண்டை இடம்பெற்றுவரும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் மட்டும் ஏறக்குறைய 6,000 சிறார் படைவீரர் உள்ளனர்.

2002ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதியன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சிறார் படைவீரர்க்கெதிரான உடன்படிக்கை கொண்டுவரப்பட்டது. இதன்படி 18 வயதுக்குட்பட்ட சிறார் படைப்பிரிவுக்கு சேர்க்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆதாரம்: AGR








All the contents on this site are copyrighted ©.