2014-02-08 15:52:52

ஆராய்ச்சித் துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது இந்தியா


பிப்.08,2014. அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறையில் அமெரிக்கா, சீனாவை விட இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளதாக அமெரிக்காவின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட தேசிய அறிவியல் மையம், 2010ம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் அமெரிக்காவின் பங்கு 4070 கோடி டாலர்களாகவும், 2011ம் ஆண்டில் 4240 கோடி டாலர்களாகவும் உயர்ந்து, தற்போது வரை அந்நாடு முதலிடத்தையே வகித்து வருகிறது எனக் கூறியது.
2011ம் ஆண்டில் சீனா 2080 கோடி டாலர்களை முதலீடு செய்து இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த முதலீடு அமெரிக்காவின் முதலீட்டில் பாதியாகும். மேலும், 1470 கோடி டாலர்களை முதலீடு செய்து ஜப்பான் மூன்றாமிடத்தில் உள்ளது. ஆல் இந்தியா, கடந்த 2007ம் ஆண்டில் 240 கோடி டாலர்களை முதலீடு செய்தது. இதே நிலைதான் தற்போதும் நீடித்து வருகிறது என தேசிய அறிவியல் மையம் கூறியது.

ஆதாரம் : தினமணி







All the contents on this site are copyrighted ©.