2014-02-08 15:52:07

அல்ஜீரியா மற்றும் கொரிய மறைசாட்சிகளின் வாழ்வுமுறைகள் அங்கீகரிப்பு


பிப்.08,2014. அல்ஜீரியா மற்றும் கொரிய மறைசாட்சிகளின் வாழ்வுமுறை மற்றும் மூன்று இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வுமுறைகளை இவ்வெள்ளி மாலை அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனிதர் நிலைக்கு உயர்த்தும் பேராயத் தலைவர் கர்தினால் Angelo Amato அவர்கள் இவ்வெள்ளி மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து இவ்விறையடியார்கள் குறித்த விபரங்களைச் சமர்ப்பித்தார். திருத்தந்தையும் அவற்றை ஏற்றுக்கொண்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் Sassariல் 1564ம் ஆண்டு பிறந்த பிரான்சிஸ்கன் சபையின் இறையடியார் Francesco Zirano 1603ம் ஆண்டின் சனவரி 25ம் தேதி அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ் நகரில் கொல்லப்பட்டார்.
பொதுநிலை விசுவாசியான Paolo Yun Ji-chung மற்றும் அவரோடு சேர்ந்த 123 பேரும் 1791ம் ஆண்டுக்கும் 1888ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்டனர்.
இவர்களுடன், மெக்சிகோ நாட்டு Saltillo ஆயர் Gesù Maria Echavarría y Aguirre, இத்தாலியின் பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணியாளர் Faustino Ghilardi, இஸ்பெயினின் இறையன்பு சகோதரிகள் சபையை நிறுவிய Maria Rocío di Gesù Crocifisso ஆகிய மூன்று இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வுமுறைகளையும் அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.