2014-02-08 15:52:37

அ.பணி செத்ரிக் பிரகாஷ் : குஜராத் படுகொலைகளில் மோடியின் பங்கு மறக்கப்படக் கூடாது


பிப்.08,2014. 2014ம் ஆண்டின் பொதுத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி அவர்கள் நிறுத்தப்பட்டு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டுவரும்வேளை, 2002ம் ஆண்டின் படுகொலைகளில் மோடியின் பங்கு மறக்கப்படக் கூடாது என நினைவுபடுத்தியுள்ளார் இயேசு சபை அருள்பணி செத்ரிக் பிரகாஷ்.
நரேந்திர மோடி அவர்களின் செயல்களும் சொற்களும் பின்பற்றக்கூடியவை என, இந்து அடிப்படைவாதிகள் கூறிவரும்வேளை, மோடி குறித்த தனது எச்சரிப்புக்களை முன்வைத்துள்ளார் அகமதபாத் பிரசாந்த் மைய இயக்குனர் அருள்பணி செத்ரிக் பிரகாஷ்.
பலர் நரேந்திர மோடி அவர்களின் பொருளாதாரத் திறமையைப் பாராட்டி வருகின்றனர், மோடியின் குஜராத் மாநிலம், இந்தியாவில் பணக்கார மாநிலங்களில் ஒன்று என்றெல்லாம் அவரைப் பற்றிப் பேசப்படுகின்றது என்றுரைத்துள்ள அருள்பணி செத்ரிக் பிரகாஷ், 2002ம் ஆண்டில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறைக் கலவரங்கள் இடம்பெற்றபோது மோடியின் நிலைப்பாட்டை பலர் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இயேசு சபையினரின் பிரசாந்த் மையம், மனித உரிமைகள், நீதி மற்றும் அமைதிக்கான மையமாகும்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.