2014-02-06 16:13:14

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட Harley Davidson ஏலம்


பிப்.06,2014. அண்மையில் இத்தாலியில் பெய்துவரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள Tuscany, Latium ஆகிய பகுதிகளில் வாழும் மக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன் பொது மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டு, அவர்களுக்குத் தன் தனிப்பட்ட செபங்களை அர்ப்பணித்தார்.
அதேபோல், நிலவிவந்த கடுமையான குளிர் மற்றும் மழை காரணமாக புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திற்கு வரமுடியாமல், திருத்தந்தை ஆறாம் பவுல் மன்றத்தில் கூடி, தன் மறையுரைக்குச் செவிமடுத்துவரும் நோயுற்றோருக்கு தன் செபங்கலையும், ஆசீரையும் திருத்தந்தை வழங்கினார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட Harley Davidson நிறுவனத்தைச் சேர்ந்த இரு சக்கர வாகனம் ஒன்று, பிப்ரவரி 6, இவ்வியாழனன்று பிரான்ஸ் நாட்டில் ஏலத்தில் விடப்பட்டு, அந்தத் தொகை உரோம் நகரில் திருத்தந்தையின் பெயரால் நிகழும் பிறரன்புப் பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.
இவ்வுலகம், நம்மைப் பற்றியும், நமது உடைமைகள், நமது ஆசைகள் பற்றியும் நம் கவனத்தை ஈர்க்கின்றது; நற்செய்தியோ, அடுத்தவர்களை, குறிப்பாக ஏழைகளை நோக்கி நம் மனங்களைத் திருப்ப அழைப்பு விடுக்கிறது என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒன்பது மொழிகளில் தன் Twitter செய்தியாக இவ்வியாழனன்று வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.