2014-02-04 16:07:48

பங்களாதேஷில் 87 விழுக்காட்டுப் பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர்


பிப்.04,2014. பங்களாதேஷில் திருமணமான பெண்களில் ஏறக்குறைய 87 விழுக்காட்டினர் தங்களின் கணவர்களால் துன்புறுத்தப்படுகின்றனர் என்று தேசிய அளவில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.
பங்களாதேஷின் தேசியப் புள்ளிவிபர ஆய்வு மையம், ஐ.நா.வின் மக்கள்தொகை நிதி அமைப்பின் உதவியுடன் எடுத்த ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
பங்களாதேஷில் 2012ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான 5,616 வன்முறைப் புகார்கள் வழக்குப் பதிவு செய்யப்பட்டன, இவற்றில் 904 வழக்குகள் பாலியல் வன்செயல்களாகும். 558 வழக்குகள் வரதட்சணை தொடர்பான கொலைகளாகும். 435 தற்கொலை சார்ந்த வழக்குகளாகும்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.