2014-02-03 16:04:39

இயேசு சபை அதிபர், 'கல்விப்பணி நாட்டின் வளர்ச்சியை நோக்கமாகக்கொண்டது'


பிப்.03,2014. ஒரு நாட்டின் வளர்ச்சித்திட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் கல்வி நிலையங்களை உருவாக்கி செயலாற்றுவதில் அனைத்து அமைப்பு முறைகளோடும் இணைந்து உழைக்க இயேசு சபை தயாராக இருப்பதாக அறிவித்தார் அத்துறவுச் சபையின் உலகத் தலைவர் அருள் பணியாளர் அடோல்ஃபோ நிக்கொலஸ்.
கிழக்கு திமோர் நாட்டின் தலைநகருக்கு அருகாமையிலுள்ள Kasait என்ற நகரில் புனித இக்னேசியஸ் லொயோலா கல்லூரியில் கல்வியாண்டை துவக்கி வைத்து உரையாற்றிய இயேசு சபையின் உலகத் தலைவர் அருள் பணி நிக்கொலஸ் அவர்கள், இயேசு சபையினரின் எந்த ஒரு கல்வித்திட்டமும் அவர்களின் கல்வி கற்பிக்கும் பாரம்பரியத்தை தக்கவைக்கும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளது என்றார்.
Kasait பகுதியில் இயேசு சபையினர் திட்டமிட்டுள்ள உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சிப்பள்ளிக்கானப் பணிகளை இயேசுசபை உலகத் தலைவர் துவக்கி வைத்த விழாவில் கிழக்கு திமோரின் கல்வி அமைச்சர், நலவாழ்வுத்துறை அமைச்சர், தலைநகர் திலி ஆயர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.