2014-02-01 14:51:15

சீனாவில் மகாத்மா காந்தி குறித்த ஆர்வம் அதிகரிப்பு


பிப்.01, 2014. இந்தியாவின் தேசத்தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்திஜியின் சுய சரிதையான 'சத்திய சோதனை' முதன் முதலாக சீன மொழியான Mandarinல் மொழி பெயர்க்கப்படுகிறது.
'சத்திய சோதனை' சீன மொழியாக்கம் பெறப்படுவது, சீனாவில் காந்தி குறித்த ஆர்வம் அதிகரிப்பதைக் காட்டுவதாக சீன அறிஞர்கள் கூறுகின்றனர்.
காந்தியின் சுய சரிதையைத் தவிர, சத்யாகிரகம், மதம், அரசியல் போன்ற தலைப்புகளில் காந்தி எழுதியவையும், அவரது உரைகளும் அடங்கிய ஐந்து தொகுப்புகளும் Mandarinல் மொழியாக்கம் செய்யப்படவுள்ளன.
மகாத்மா காந்திஜியின் எழுத்துக்கள் பெரும்பாலும், இரஷ்யாவிலும், சீனாவிலும் கிடைப்பதில்லை. சீனாவில் காந்திஜியின் எழுத்துக்கள் மீது எழுந்திருக்கும் ஆர்வம் குறித்து தங்களுக்கு உண்மையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது", என்று அஹமதாபாதில் காந்திஜி நிறுவிய நவஜீவன் அறக்கட்டளை என்ற பிரசுர நிறுவனத்தைச் சேர்ந்த விவேக் தேசாய் கூறினார்.
'சத்திய சோதனை' உலகின் 35 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இதன் 2 இலட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.