2014-02-01 14:50:49

Ukraine கிறிஸ்தவர்க்காகச் செபிக்குமாறு பிலடெல்ஃபியா பேராயர் அழைப்பு


பிப்.01,2014. Ukraineல் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் நெருக்கடிநிலைகள் களையப்படுவதற்கு கத்தோலிக்கர் செபிக்குமாறு கேட்டுள்ள அதேவேளை, அந்நாட்டின் அரசியல் மற்றும் தொழிலதிபர்கள்மீது அமெரிக்க ஐக்கிய நாடு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கக் கத்தோலிக்கர் ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளார் பிலடெல்ஃபியா பேராயர் Charles J. Chaput.
அமெரிக்க ஐக்கிய நாடு மௌனம் காப்பது, Ukraineல் இடம்பெறும் அடக்குமுறைகளை ஊக்குவிப்பதாய் இருக்கும் என்றும், பல ஆண்டுகள் கடும் துன்பங்களை அனுபவித்த அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் இனிமேலும் துன்பம் அனுபவிக்காமல் இருப்பதற்கு உதவ வேண்டுமென்றும் பேராயர் Chaput கூறியுள்ளார்.
கம்யூனிசம் வீழ்ச்சியுற்ற பின்னர் Ukraine நாட்டின் நிலைமைகள் முன்னேறி வந்தன என்று கூறிய பேராயர் Chaput, 2013ம் ஆண்டின் கடைசியிலிருந்து அந்நாட்டில் போராட்டங்கள் அடக்கப்படுவதும், அவற்றில் கலந்துகொள்வோர் கொலை செய்யப்படுவதும், நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்படுவதுமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன எனக் கூறியுள்ளார்.
Ukraine கிறிஸ்தவத் தலைவர்களும் மௌனம் சாதிக்காமல் அரசின் வன்முறைகளையும், அரசியல் அடக்குமுறைகளையும் ஊழலையும் கண்டித்து வருகின்றனர் எனவும் பிலடெல்ஃபியா பேராயர் Chaput கூறியுள்ளார்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.