2014-01-31 15:46:31

உலகில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள சிறார் குறித்த விபரங்கள் அவசியம், யூனிசெப்


சன.31,2014. உலகில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள 220 கோடிச் சிறாரின் அடிப்படை உரிமைகளுக்குத் தடைகளாய் இருக்கும் காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படுமாறு யூனிசெப் நிறுவனத்தின் புதிய அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
உலகில் சிறார் குறித்த விபரங்களைச் சேகரிப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டும் அவ்வறிக்கை, சமூகத்தில் அதிகமாகப் புறக்கணிக்கப்படுகின்ற, பள்ளிக்குச் செல்வதற்கு வசதியற்ற, நோய்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் அடிப்படை நலவாழ்வு வசதிகள் இல்லாத சிறார்களை இனம்கண்டு அவர்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கு, சிறார் குறித்த விபரங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறுகிறது.
சிறார் குறித்து ஏற்கனவே கிடைத்துள்ள விபரங்களினால், 1990ம் ஆண்டிலிருந்து, ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் துன்புறும் சிறாரின் எண்ணிக்கை 37 விழுக்காடு குறைந்துள்ளது என்றும், இவ்வறிக்கை தயாரிப்பில் தலைமை வதித்த யூனிசெப் அதிகாரி Tessa Wardlaw கூறினார்.

ஆதாரம் :UN







All the contents on this site are copyrighted ©.