2014-01-31 15:46:38

இளையோரை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகள் வருங்காலத்தில் பொருளாதாரத்தில் உயரும்


சன.31,2014. முதியவர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளோடு ஒப்பிடுகையில், இளையோர் அதிகமாக இருக்கும் ஆப்ரிக்கா போன்ற பகுதிகள், இன்னும் சில ஆண்டுகளில் பொருளாதாரத்தில் முன்னேறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.
வாஷிங்டனில் உள்ள ப்யூ ஆய்வு மையம், 21 வெவ்வேறு நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், ஐரோப்பா, கிழக்கு ஆசியா ஆகிய இரு பகுதிகளில் முதியோர்கள் அதிகம் வாழும் நிலையில், அங்கு வேலை செய்யக்கூடிய மக்களின் எண்ணிக்கை குறைந்து, ஓய்வூதியச் செலவுகள் அதிகரிக்கும் என்று கூறுகிறது.
ஆனால், மக்கள் தொகை விரைவாக அதிகரிக்கும் நைஜீரியா, கென்யா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் பலனடையும்; அதேபோல, குடியேற்றதாரர்களைப் பெருமெண்ணிக்கையில் கொண்டுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளும் பலனடையும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
தங்கள் நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகமாவதுதான் மிகப்பெரிய பிரச்சனை என ஜப்பானில் 90 விழுக்காட்டினர் கருதுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.