2014-01-30 14:17:48

புனிதரும் மனிதரே : ஐந்து புனிதர்களின் அன்னை


பத்துக் குழந்தைகளைப் பெற்று பாசமுடன் வளர்த்து வந்தவர் எமிலியா. பாசத்தோடு கிறிஸ்தவ விசுவாசத்தையும் ஊட்டி வளர்த்து வந்தார் தாய் எமிலியா. திடீரென ஒருநாள் Naucratius என்ற மகன் இறந்துவிட்டார். இந்த மகனின் இழப்பை இத்தாயால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இதயத்தைப் பிழிந்தெடுக்கும் வலியை அனுபவித்தார் அவர். அப்போது இளைய மகளான மக்ரீனா தனது தாயிடம், இறந்தவர்களுக்காக கிறிஸ்தவர்கள் அழக்கூடாது என்று சொல்லி தேற்றினார். ஒன்பது பிள்ளைகளும் வளர்ந்த பின்னர் நிலங்களை எல்லாருக்கும் பிரித்துக் கொடுத்த எமிலியா, தான் புதிதாக வாழ்வதற்கென ஒரு சிறிய நிலத்தை மட்டும் தனக்கென எடுத்துக்கொண்டார். தனியாகச் செபத்தில் வாழ்நாளைச் செலவழிக்க விரும்பினார் எமிலியா. ஆயினும் அவரது இளைய மகளும் தாயோடு சென்றார். பின்னர் சில அடிமைப்பெண்களும் இவர்களோடு சேர்ந்து கொண்டனர். பிள்ளைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர் எமிலியா. இவர் புனித அமெலியா என்றும் அழைக்கப்படுகிறார். புனிதர்கள் மக்ரினா, பெரிய பேசில், Sebaste பீட்டர், Nyssa கிரகரி, தெயோசெபியா ஆகிய ஐவரும் புனித எமிலியாவின் பிள்ளைகள். புனித எமிலியாவின் கணவர் மூத்தவர் பேசில், மாமியார் பெரிய மக்ரீனா ஆகியோரும் புனிதர்களே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.